August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்குத்தான் தேசத் தந்தையாம்-இந்தி பாடகர் சர்ச்சை கருத்து

1 min read

Mahatma Gandhi is the father of the nation for Pakistan – Hindi singer’s controversial comment

23.12.2024
”மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல. பாக்., நாடு இருப்பதற்கு காந்திதான் காரணம்” என இந்தி பாடகர் அபிஜித் பட்டாச்சாரியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1990களில் பாலிவுட்டின் முன்னணி பின்னணி பாடகராக இருந்தவர் அபிஜித் பட்டாச்சாரியா. இந்தி, பெங்காலி மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள இவரை, பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் என்பவர் தான் அறிமுகப்படுத்தினார். அப்போதைய காலக்கட்டத்தில் இவரின் இசையில் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவுடன் இணைந்து அபிஜித் பாடிய டூயட் பாடல்கள் ஹிட்டானது. இந்த நிலையில் மகாத்மா காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பரபரப்பாக்கியுள்ளார்.
சமீபத்தில் அவர் அபிஜித் அளித்த பேட்டி ஒன்றில், ”இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் மகாத்மா காந்தியை விடவும் மேலானவர். மகாத்மா காந்தியை எப்படி தேசத் தந்தை என்று அழைக்கிறோமோ, அதேபோல இசையுலக தேசத்தின் தந்தை ஆர்.டி.பர்மன். மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல. இந்தியா ஏற்கனவே இருந்தது, பின்னர் இந்தியாவிலிருந்து தான் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. காந்தி இந்தியாவின் தேசத் தந்தை என்று தவறாக அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடு இருப்பதற்கு காரணமானவர் அவர்தான்” என்று பேசினார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *