June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்த விபத்தில் 10 பேர் பலி

1 min read

killed as plane crashes into house in Brazil

23.12.2024
பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். சாலொ பாலோ மாகாணத்தில் அமைந்துள்ளது சுற்றுலா நகரமான கிராமடோ.
இந்நிலையில், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது.

கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அதேவேளை வீட்டில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *