மன்மோகன் சிங் காலமானார்- உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
1 min read
Manmohan Singh passes away – PM Modi pays tribute to the body
27.12.2024
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்(வயது 92), உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார்.
மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை (டிச.28) நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி முரமு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் மறைவு குறித்து செய்தியறிந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பிரியங்கா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து நிலைமையை கேட்டறிந்தனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் அவரது இறுதிச்சடங்குகள் நாளை(டிச.28) நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது;
அவரின்(மன்மோகன் சிங்) இறுதிச் சடங்குகள் நாளை(டிச.28) நடைபெறும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மன்மோகன் சிங் காங்கிரசுக்கும், நாட்டுக்கும் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர்.
சுதந்திர இந்தியாவின் கதாநாயகன். அவரது பணி, நாட்டை ஆண்ட திறனை அனைவரும் நன்கு அறிவர். காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.