வன்கொடுமை சம்பவத்தை அரசியல் ஆக்குகின்றனர்- அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
1 min read
They are politicizing the atrocity incident – Interview with Minister Kovi Chezhiyan
27.12.2024
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு அளிக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் துரதிருஷ்டவசமாக எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் மாணவிகள் கல்லூரி கமிட்டியிடம் தாமாக வந்து புகார் அளிக்க வேண்டும்.
வேறு எதுவும் கிடைக்காததால் அரசியல் கட்சியினர் மாணவி வன்கொடுமை சம்பவத்தை அரசியல் ஆக்குகின்றனர்.
மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசியல் ஆக்க விரும்பவில்லை.
சட்டத்தின்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முட்புதர்களை அகற்றும் பணியும் அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.