June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 4-ந் தேதி பள்ளி மாணவ, மாணவியர் மிதிவண்டி போட்டிகள்

1 min read

School students’ bicycle competition on the 4th in Tenkasi

30.12.2024
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 04/01/2025 அன்று அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீட்டர் தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கீ.மீட்டர் தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15கி. மீட்டர் தூரமும். 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கீ.மீட்டர் தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டியானது 04/01/2025 அன்று காலை 6,00 மணிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஐ.டி. வாழைக்காய் மண்டியிலிருந்து தொடங்கப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 03/01/2025 மாலை 5.30 மணி ஆகும். போட்டியில் பங்கு பெறும் அனைவரும் தங்கள் பள்ளியிலிருந்து (உறுதி சான்றிதழ்) போனபைடு சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்கப்பட வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5000/-. இரண்டாம் பரிசு ரூ.3000/-. மூன்றாம் பரிசு ரூ.2000/- நான்காம் பரிசு முதல் பத்தாம் பரிசு வரை ரூபாய் 250/-ம் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையானது நெஃப்ட் மூலம் வழங்கப்படவுள்ளதால் தங்களின் வங்கி கணக்கு முதல் பக்க நகலை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.

முன்பதிவு செய்திட (ம) மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம். 163A. ரயில்நகர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் பின்புறம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04633 212580/ 8608061125 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *