தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அரவிந்த் நியமனம்
1 min read
Aravind appointed as Tenkasi District Superintendent of Police
30.12.2024
தென்காசி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த வி.ஆர். ஸ்ரீனிவாசன் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேர்களை பணியிட மாற்றம் செய்தும், 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வி.ஆர்.ஸ்ரீனிவாசன் சென்னை மவுண்ட் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திருச்சி தலைமை இட துணை ஆணையராக பணியாற்றிவந்த அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட புதிய எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரவிந்த் திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வந்தார்.முன்னதாக அரவிந்த், சென்னை மாநகர உளவுப் பிரிவு துணை கமிஷனராகவும், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர் மாநகர துணை கமிஷனர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். தற்போது திருச்சி மாநகர காவல் துறையில் தலைமையிட துணை கமிஷனராக பணியாற்றி வரும் நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பியாக அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள அரவிந்த் தற்போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது.