June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் ஆய்வு

1 min read

Tourism Minister I. Rajendran inspects Tenkasi district

30.12.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில், அடவிநயினார் அணை மற்றும் குண்டாறு அணை பகுதிகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், அடவிநயினார் அணை, குண்டாறு அணை பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட தமிழக சுற் றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அணை பகுதிகளில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் விரைவில் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படும் என்று கூறினார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணைப் பகுதிகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் ஆய்வு மேற் கொண்ட போது குண்டாறு அணைக்கு மேலேயுள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும். ஜீப்புகள் மேலே
செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.
இதனை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகிறது என்று அமைச்சரிடம், மாவட்ட திமுக நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரபீக்காதர் முகைதீன் மனு வழங்கினார்.

இம்மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் இதுகுறித்து கலெக்டரிடம் பேசி விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தொடர்ந்து கிரிவலப்பாதை, மலைப் பாதை, பூங்கா உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அடவிநயினார் அணைப்பகுதியை அமைச்சர் பார்வையிட்டார். வடகரையில் பேரூராட்சி தலைவர் ஷேக்தாவூது. அடவிநயினார் அணை யில் உள்ள பூங்காவை சீர மைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கி னார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் பேட்டியளித்தார், அப்போது அவர் கூறுகையில் அடவிநயினார் அணை மற்றும் குண்டாறு அணை பகுதியில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் விரைவில் சீரமைக்கப்படும்” என்றார்.

தென்காசி மாவட்ட ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர்
ஏ.கே.கமல் கிஷோர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி, பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே ஜெயபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வடகரை ஷேக்தாவூது, இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி, பண்பொழி பேரூராட்சி தலைவர் கரிசல் அ.இராஜராஜன், தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம் ஆகியோர் உடன்இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *