தென்காசியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Drug eradication awareness program in Tenkasi
31.12.2024
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் கல்லூரி கல்வித்துறையும் கலால் துறையும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நான் தான் அந்த பையன் போதையை தொட மாட்டேன் போதையை தொட அனுமதிக்க மாட்டேன்’ எனும் வாசகங்கள் தாங்கிய பிரச்சார பதாகையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் திறந்து வைத்தார்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் கல்லூரி கல்வித்துறையும் கலால் துறையும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நான் தான் அந்த பையன் போதையை தொட மாட்டேன் போதையை தொட அனுமதிக்க மாட்டேன்’ எனும் வாசகங்கள் தாங்கிய பிரச்சார பதாகையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
மாணவர்கள் தங்கள் திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். போதை பழக்கமானது ஒருவருடைய கல்வி, திறமைகள் அனைத்தையும் தாண்டி தவறுதலான பாதைக்கு அழைத்துச்சென்றுவிடும். போதைப்பொருள் பயன்படுத்துவது பற்றி தெரிய வந்தால் 94875451 என்ற மாவட்ட நிர்வாகத்தின் எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் அளிக்க வேண்டும். போதைக்கு எதிராக இளம் தலைமுறையினர் போராட வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மற்றும் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் போதைக்கு எதிராக உறுதிமொழியினை ஏற்று கொண்டனர்.
முன்னதாக தென்காசி முழுவதும் யார்ரா அந்த பையன் இன்னும் தலைப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளின் தொடர்ச்சியாக தற்போதைய விளம்பரப் பதாகை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், கல்லூரி கல்வி இணை இயக்குநர் பிரதிநிதி நா. சரவணன், தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன், தென்காசி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்,
பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா மற்றும் ஜமீமா ஜின்னா மற்றும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.