August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தாமதமாக ஏவப்பட்டது ஏன்?

1 min read

Why was the launch of PSLV C-60 rocket delayed?

31.12.2024
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.
இந்தியாவின் கனவுத் திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்காக பல்வேறு பரிசோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நடத்தி வருகிறது.விண்ணில் செயற்கைக்கோள் களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில்நுட்ப அறிவு அதாவது ‘விண்வெளி டாக்கிங் பரிசோதனை’ என்ற பணிக்காக இஸ்ரோ ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது.
இது ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும். இதனை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையை நிகழ்த்த உள்ளது.

இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக் கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி நேற்று இரவு 10 மணி 15 வினாடிக்கு தீப்பிழம்பை கக்கியபடி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தது.
ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதையில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டன. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் கூடியிருந்த விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
ராக்கெட் ஏவும் நேரம் 2 நிமிடம் ஒத்திவைத்தது ஏன்?

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். இந்தநிலையில் சுமார் 16 மணி நேரம் கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் ராக்கெட் ஏவும் நேரம் 2 நிமிடம் 2 வினாடிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பொதுவாக விண்வெளி கழிவுகள் குறிப்பிட்ட நேரத்தில் கடந்து செல்லும்போது அதில் செயற்கைக்கோள்கள் மோதி சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக ராக்கெட் ஏவும் நேரம் ஒத்திவைக்கப்படும். ஆனால் நேற்று பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்காக திட்டமிட்டு இருந்த நேரத்தில், அதே சுற்றுவட்டப்பாதையில் வேறு செயற்கைக்கோள் கடந்து சென்றதால், அதில் மோதுவதை தவிர்க்க பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவும் நேரம் 2 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *