குற்றாலம் மவுனசாமி மடம் பீடாதிபதி விபத்தில் காயம்
1 min read
Courtallam Maunaswamy Mutt priest injured in accident
1.1.2025
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஸ்ரீ சித்தேஸ்வரி பீட மகா சமஸ்தான ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌன சாமி மடத்தின் பீடாதிபதி பரமஹம்சர், பரிவ்ராஜ காச்சார்யா, ஜகத்குரு புனித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மகா சுவாமிகள் நேற்று காலை குற்றாலத்திலிருந்து திருப்பதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வேலூர் அருகே சென்ற போது அவரது கார் விபத்தில் சிக்கியது இதில் பலத்த காயமடைந்த சுவாமிஜி வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி குற்றாலம் ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌனசாமி மடத்தின் மேலாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 108 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ சித்தேஸ்வரி பீட மகாசமஸ்தான ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமி மடத்தின் பீடாதிபதியாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பரமஹம்சர், பரிவ்ராஜ காச்சார்யா, ஜகத்குரு புனித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மகா சுவாமிகள் இன்று காலை குற்றாலத்திலிருந்து திருப்பதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூர் அருகே சென்ற போது அவரது கார் விபத்தில் சிக்கியது இதில் பலத்த காயமடைந்த சுவாமிஜி வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுவாமிஜி நல்ல நினைவுடன், நிலையான நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு நன்கு பதிலளித்து வருகிறார், மேலும் நலமாகி வருகிறார். அவரது குணமடைதல் குறித்து நாங்கள் அவ்வப்போது உங்களுக்குத் தகவல் தெரிவிப்போம்.
மேலும் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுவாமிஜி மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.
இவ்வாறு குற்றாலம்
ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌனசாமி மடத்தின் மேலாளர் மூர்த்தி அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.