பொதிகை, நெல்லை ,எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேரம் மாற்றம்
1 min read
Time change of Pothikai, Nellai and Express trains
1.1.2025
பொதிகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் நேரம் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய ரெயில்வே ஆண்டு தோறும் பயணிகளின் தேவைக்கேற்ப புதிய ரெயில்களை இயக்குவதோடு, சில ரெயில்களையும் நீட்டிப்பு செய்து வருகிறது. மேலும் சில ரெயில்களுக்கு கூடுதல் நிறுத் தங்களையும் அளித்து வருகிறது.
அதன்படி இந்த 2025-ம் ஆண்டுக்கு சில ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டு உள்ளன. தற்போது சென்னை தெற்கு ரெயில்வே 56 ரெயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளது. இந்த நேரம் மாற்றம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு பதில் 8.10 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு காலை 7.25 மணிக்கு வந்து சேருகிறது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதில் 8.40 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு வழக்கமாக காலை 7 சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இனி 8.40 மணிக்கு புறப் படும். இந்த ரெயில் நெல்லை சந்திப்புக்கு வழக்கம் போல் காலை 6.40 மணிக்கு வந்து சேரும்.
குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் நெல்லை சந்திப்புக்கு காலை 8.50 மணிக்கு வந்து 8.55 மணிக்கு புறப்படும். சென்னை -குருவாயூர் எக்ஸ் பிரஸ் நெல்லைக்கு இரவு 9 மணிக்கு வந்து செல்கிறது.
தூத்துக்குடி -பாலக்காடு எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப் பட்டு நெல்லை சந்திப்புக்கு இரவு 11.30 மணிக்கு பதில், முன்னதாக 10.55 மணிக்கு வந்து 11 மணிக்கு புறப்படுகிறது.
செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச் செந்தூரில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு இரவு 9.45 மணிக்கு வந்து செல்கிறது. மறுமார்க்சுத்தில் எழும்பூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 4.15 மணிக்கு வந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல் நெல்லை -திருச்செந்தூர் -நெல்லை மற்றும் நெல்லை – செங்கோட்டை -நெல்லை பாசஞ்சர் ரெயில்களின் எண்களும், நேரமும் மாற்றி அமைக்கப் பட்டு. இன்று முதல்
அமலுக்கு வந்துள்ளது.
நெல்லையில் இருந்து திருச் செந்தூருக்கு காலை 7.15 மணி, 10.20 மணி, 11.40 மணி, மாலை 4.30 மணி, 6.50 மணிக்கு பாசஞ்சர் ரெயில்கள் புறப்ப டுகின்றன. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து நெல் லைக்கு காலை 7.10 மணி, 10.10 மணி, பிற்பகல் 2.50 மணி. மாலை 6.15 மணிக்கு பாசஞ்சர் ரெயில்கள் புறப்படுகிறது.
நெல்லையில் இருந்து செங் கோட்டைக்கு காலை 6.30 மணி, 9.50 மணி, மதியம் 1.40 மணி, மாலை 6.20 மணிக்கு பாசஞ்சர் ரெயில்கள் புறப்படுகின்றன. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 6.40 மணி, 10.05 மணி, பிற்பகல் 2.05 மற்றும் மாலை 06 .05 மணிக்கு பாசஞ்சர் ரெயில்கள் புறப்ப டுகின்றன,
மேலும் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு (ஞாயிறு தவிர) காலை 7.45 மணிக்கும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கும் பாசஞ்சர் ரெயில் புறப்படுகிறது.
நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு காலை 7.05 மணிக்கும். கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாலை 6.20 மணிக்கு பாசஞ் சர் ரெயில்கள் புறப்படுகின்றன. இந்த தகவலை தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.