June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

“ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி வரலாறு படைத்தது இஸ்ரோ

1 min read

ISRO creates history with “Spatial-Tech” project

16.1.2025
இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
தொடர்ந்து, ஜனவரி 7ம் தேதி அன்று முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பிறகு. ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், ஜனவரி 9ம் தேதி அன்றும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன.

இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ” இந்தியாவின் விண்வெளி திறன்களை உயர்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியானது, இந்திய விண்வெளி திட்டத்தில் புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது” என்றார்.

இந்நிலையில், விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ககன்யான் உள்ளிட்ட இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.

2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துக்கள். இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *