மேடையில் மோடியுடன் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள்
1 min read
Key leaders of the India alliance with Modi on stage
2.5.2025
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பிரதமர் மோடி துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது:
கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். கேரளாவில் ஒருபுறம் வாய்ப்புகளை அள்ளித்தரும் பெரிய கடலும் மறுபுறம் இயற்கை அழகும் உள்ளது.
புதிய யுகத்தின் வளர்ச்சியாக கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமையும்.
இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
விழா மேடையில் பினராயி விஜயன், காங்கிரசின் சசிதரூர் உள்ளதால் இன்று பலரின் தூக்கம் பறிபோகும்.
இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தன்னுடன் மேடையை பகிர்வதால் பலரின் தூக்கம் பறிபோகும்.
இவ்வாறு அவர் கூறினார்.