தென்காசியில் கார் மோதி ஜோதிடர் பலி- 6பைக்குகள்சேதம்
1 min read
Astrologer killed in car collision in Tenkasi – 6 bikes damaged
26.5.2025
தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் ஒருவர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாகுட்டி ன்பவரது மகன் முரளி (வயது 30). இவர் நேற்று தனது நண்பர்களுடன் குற்றாலத்தில் குளித்து விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
தென்காசி வாய்க்கால் பாலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த தென்காசி வள்ளுவர் தெருவை சேர்ந்த ஜோதிடர் சுடலையாண்டி (72) என்பவர் மீது மோதி அவரை இழுத்து சென்றது, மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள் மீதும் மோதி நின்றது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சுடலையாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவர்ஸ முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந் விபத்தில் உயிரிழந்த சித்த மருத்துவரான ஜோதிடர் சுடலையாண்டி, தமிழ் சினிமாவிலும் நடித்து உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.