தென்காசி: ஒரே நாளில்4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
1 min read
Tenkasi: 4 people arrested under the Goon Prevention Act in one day
6/6/2025
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவுபடி ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டர் தடுப்புச் சட்டம் என்பது வன்செயல்கள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் போன்ற குற்றங்களை தடுப்பது மற்றும் பொது ஒழுங்கை நிலைநிறுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ள ஒருவரை தடுப்புக்காவலில் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.
இந்நிலையில்., தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் 09 வயது குழந்தை விடுமுறை தினத்தில் அவரது பாட்டி வீட்டிற்கு வந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது அக்குழந்தயிடம் தவறாக நடக்க முயற்சித்த செவல்குளம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மாசானமுத்து @ குமார் (வயது 27) என்ற நபரையும்,
சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியை காண்பித்து மிரட்டி பணத்தை பறித்த முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பொன்னாக்குடி, சமத்துவபுரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் மகன் மணிகண்டன் @ வாத்து மணிகண்டன் (வயது 24) மீதும், (மேற்படி நபர் மீது முன்னீர்பள்ளம் மற்றும் சொக்கம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 05 வழக்குகள் உள்ளது)
சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட மேலநீலிதநல்லூர் கற்பகநாச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகனான மகேந்திர குமார் (வயது 28) மீதும், (மேற்படி நபர் மீது தென்காசி, புளியங்குடி மற்றும் சொக்கம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளது)
ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவில் திருவிழாவில் விளையாடிக் கொண்டிருந்த 6 மற்றும் 10 வயது குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்ற மடத்தூர் வன்னியூர், ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 27) உள்ளிட்ட 4 நபர்கள் மீதும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி 04 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை தென்காசி மாவட்டத்தில் உள்ள தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.