சிவநாடானூர் ஊராட்சிக்கு 100 சோலார் விளக்குகள்- ஸ்ரீதர் வேம்பு வழங்கினார்
1 min read
Sridhar Vembu donated 100 solar lamps to Sivanadanur Panchayat
4.6.2026
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூர் ஊராட்சிக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் 100 சோலார் தெரு விளக்குகளை சோகோ நிறுவனத்தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.முத்துசாமியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். தங்கள் ஊராட்சி பகுதிக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 சோலார் தெரு விளக்குகள் வழங்கிய ஸோகோ நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வேம்புவுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.