June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இலஞ்சியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1 min read

District Collector inspects breakfast program in Ilanji

4.6.2026
தென்காசி மாவட்டம், இலஞ்சி, ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் இன்று (04.06.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை பார்வையிட்டு உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு பள்ளிகள் ஜீன் 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.அதனடிப்படையில் இலஞ்சி, ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை பார்வையிட்டு உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *