June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

1 min read

Special train operation between Nellai-Thiruchendur

7.6.2025
வைகாசி விசாகத்தையொட்டி ஜூன் 9ம் தேதி நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

நெல்லையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06101) காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயில் (06102) பிற்பகல் 12.55 மணிக்கு நெல்லை வந்தடையும்.

திருச்செந்தூரில் இருந்து இரவு 9.00 மணிக்கு புறப்படும் ரெயில் (06103) இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்; நெல்லையில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்படும் ரயில் (06104) நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்

சிறப்பு ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *