June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு செவிலியர் கூட்டமைப்புகூட்டம்

1 min read

Tamil Nadu Public Health Nurses Federation Meeting

17.6.2025
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில தலைவி நிர்மலா கூட்டத்தில் கலந்து கொண்டு செவிலியர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து
11 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது .

அதில் கிராமப்புற மலைப்பகுதி மக்களின் 4000 செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். செவிலியர் பணியிடங்களில் மாற்று தடுப்பூசி பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்..
தடுப்பூசி பணியில் கிராம சுகாதார செவிலியரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஏற்கனவே பன்னிரண்டு மணி நேரம் செவிலியர்கள் பணியாற்றி வரும் நிலையில் கூடுதல் பொறுப்புகளை வழங்குவதை கைவிட வேண்டும. உள்ளிட்ட 11 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

எங்களின் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் மாநில தலைவி நிர்மலா தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *