June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் கடையம் வட்டார நாடார் சங்கத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

1 min read
Kamaraj's birthday celebration at the Kadayam District Nadar Association in Chennai 
15.7.2025
சென்னை வாழ் கடையம் வட்டார நாடார் உறவின் முறை சங்க சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா சங்கக் கட்டிட அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குக் கொண்டாடப்பட்டது. சங்கப் பொருளாளர் R. வைத்திலிங்கம் காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
சங்கத் தலைவர் ஆர்.சாமிநாதன், செயலாளர் ராசலிங்கம் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பில் இனிப்பு வழங்கப் பட்டது. முடிவில் வடிவேல் நன்றியுரை கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *