June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் 123 வது பிறந்தநாள் விழா

1 min read
Congress to hold Kamaraj's 123rd birthday celebration in Tenkasi  
15/7/2025
தென்காசியில் அமைந்துள்ள
காந்தி சிலை முன்பு தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்ஃபழனிநாடார் தலைமையில் நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு தென்காசி காந்தி சிலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து குத்துக்கல்வலசை, அய்யாபுரம், பகுதிகளில் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்து பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.


இந்த நிகழ்ச்சிகளுக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட காமராஜரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பூமாதேவி, தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஜி.மாடசாமி ஜோதிடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன் மாவட்ட பொதுச் செயலாளர்கள்
ஏஜிஎம் கணேசன், சந்தோஷ் ஜார்ஜ், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகவேல் வட்டாரத் தலைவர்கள் தென்காசி பெருமாள், செங்கோட்டை கதிரவன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் முகமது ரபிக், இளைஞர் காங்கிரஸ் பிரேம்குமார், நகர நிர்வாகிகள் ஏ.எல்.என். ஆறுமுகம், பீர்முகம்மது, தேவராஜன், சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், கந்தையா, அமானுல்லா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *