Marathon competition on the occasion of the Courtallam Charal festival
16.7.2025 தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குற் தாலத்தில் இந்த ஆண்டு சீசனானது தொடங்கி நடைபெற்று வரும் நிலை யில் சீசனை முன்னிட்டு குற்றாலத்திற்கு வரும் சுற்று லாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடத் தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சாரல் திரு விழா வரும் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சாரல் திருவிழா குறித்தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியானது நேற்று நடந்தது.
தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை பகுதியி லிருந்து தொடங்கிய இந்த சாரல் திருவிழா விழிப்பு ணர்வு மாரத்தானை தென் காசி மாவட்ட கலெக்டர். கே.சுமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் . இந்த மாரத்தான் போட் டியில் ஆர்வமுடன் பங் கேற்று போட்டிப் போட் டுக் கொண்டு தங்களது இலக்கை நோக்கி ஓடினர்.
இந்த மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 10கிலோமீட்டர் தூரமும். பெண்களுக்கு 5 கிலோமீட் டதூரம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரமும், இரண்டாவது பரிசு தொகையாக ரூ.3 ஆயிரமும், மூன்றாவது பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரமும் குற்றாலம் சாரல் திரு விழாவில் வழங்கப்பட உள்ளது. =