June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

=தென்காசியில் மோட்டார் சைக்கிள்களை திருட சாவிக்கொத்துடன் நடமாடும் திருடன்

1 min read
Thief walks around with a keychain to steal motorcycles in Tenkasi 
16.7.2025
தென்காசியில் சாவிக் கொத்துடன் வந்து மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வைரலாகி வரும் சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் தெருவில் தருவில் ஏராளமான கடைகள் உள்ளன. அங்குள்ள கடைளுக்கு செல்பவர்கள் தங்களின் மோட்டார் சைக்கிள்களை தெருவிலேயே நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். அப்படியே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் ஒருவர் தனது மோட் டார் சைக்கிளை கடைவீதியில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடினார். ஆனாலும் மோட்டார் சைக்கிள் கிடைக் காததால் உடனே தென்காசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத் தினர். இதற்கிடையே அந்த நபர் நிறுத்தியிருந்த பகுதியில் உள்ள கடையின் உரிமையானர் தனது கடையில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு
கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் தனது கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் அருகே மர்ம நபர் ஒருவர் நைசாக வந்து நின்றார். அந்த நபர் தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து சாவிக் கொத்தை எடுத்து, அதில் இருந்த ஒரு சாவியை எடுத்து ஒரு மோட்டார் சைக்கிளை இயக்க நினைத்தார்.

ஆனால் முடியவில்லை. பின்னர் இன்னொருசாவியை எடுத்து அதனருகே நிறுத்தப் பட்டிருந்த வேறொரு மோட் டார் சைக்கிளை இயக்க முயற்சி செய்தார். ஆனாலும் முடியவில்லை. இப்படியாக சில சாவிகளை எடுத்து மோட்டார் சைக்கிளில் சொருகி தோல்வியடைந்த நிலையில் கடைசியாக ஒரு சாவியை போட்டு மோட் டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். மோட்டார் சைக்கிளை மர் மநபர் நூதன முறையில் திரு டிய காட்சிகள் சமூக வலைத் ளங்களில் வைரலாக பரவிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *