Aesthetic Art Workshop at Sri Parasakthi Women's College, Courtallam
18.7.2025 தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு சர்வோதய சங்கம் காதி கிராமோத்யோக் வித்யாலயத்துடன் இணைந்து "அழகியல் கலை" குறித்த இலவச சான்றிதழ் பயிற்சிப்பட்டறை, 11,14,15.7.2025 ஆகிய மூன்று நாட்கள் நடைப்பெற்றது.
குற்றாலம், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் புத்தாக்க அமைப்பு மற்றும் தொழில் முனைவோர் அமைப்பு, தொழில் முனைவோர்களாக உருவாகத் துடிக்கும் மாணவிகளை ஊக்கமூட்டும் வகையில் தமிழ்நாடு சர்வோதய சங்கம் காதி கிராமோத்யோக் வித்யாலயத்துடன் இணைந்து "அழகியல் கலை" குறித்த இலவச சான்றிதழ் பயிற்சிப்பட்டறை, மூன்று நாட்கள் நடைப்பெற்றது.
இந்த பயிற்சிப்பட்டறையை குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அமிர்தவல்லி மற்றும் கல்லூரியின் செயலாளர் ம.அன்புமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் இரா.மாலினி வரவேற்புரை வழங்கினார். திருமதி. ரென்சி. அழகுக்கலை நிபுணர், தமிழ்நாடு சர்வோதய சங்கம் காதி கிராமோத்யோக் வித்யாலயம், மாணவிகளுக்கு புருவத்தை சீர் செய்யும் முறை, புருவ பராமரிப்பு, மணப்பெண் அலங்காரம். புடவையை நேர்த்தியாக கட்டும் முறை, சிகை அலங்காரம். முகவடிவமைப்புக்கு பொருத்தமான முடிதிருத்தத்தை தேர்வு செய்தல், மருதாணியை பயன்படுத்தி முடிக்கு வண்ணம் தீட்டுதல், கைகளில் ஓவியம் வரைதல், சருமம், முகம் மற்றும் நகத்தை பொலிவூட்டும் முறைகளை மாணவிகளுக்கு கற்றுத்தந்தார்.
பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு சர்வோதய சங்கம் காதி கிராமோத்யோக் வித்யாலயா முதல்வர் சரவணகுமார் மற்றும் புத்தாக்க அமைப்பு தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். புத்தாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தாவரவியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் சி.பங்கஜவல்லி நன்றி உரை ஆற்றினார்.
தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் சு.பார்வதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இப்பயிற்சிப்பட்டறையில் 80 மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, அழகு திறன் கலைகளை கற்றுக்கொண்டு தொழில்முனைவோராகும் தகுதியினைப் பெற்றனர்