June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன- மத்திய அரசு தகவல்

1 min read

Census preparations have begun – Central Government information

23.7.2025
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ம் தேதி துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ‘நேஷனல் சென்சஸ்’ எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் 2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் பற்றி எம்.பி.க்கள் சிலர் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் ஜூன் 16-ந் தேதியிட்ட அரசிதழ் வெளியீடு மூலம் 2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன. இது தொடர்பாக, கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் டெல்லியில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குனர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *