செங்கோட்டை,கீழப்பாவூர், கடையம், பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
1 min read
Stalin’s camp with you in Sengottai, Keelappavur, Kadayam, areas
24,7.2025
தென்காசி மாவட்டத்தில். செங்கோட்டை நகராட்சி, கீழப்பாவூர் பேரூராட்சி, வாசுதேவநல்லூர், ஊராட்சி ஒன்றியம் சங்கனாப்பேரி ஊராட்சி, கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார் பட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி. கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நேரில்
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் செங்கோட்டை வட்டம் வார்டு எண் 1,2,3 ஆகியவற்றிற்கான முகாம் காலாங்கரை யாதவர் சமுதாய நலக்கூடத்திலும், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 17 ஆகியவற்றிற்கான முகாம் கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்கனாப்பேரி ஊராட்சிக்கான முகாம் சங்கனாப்பேரி சமுதாய நலக்கூடத்திலும், கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார் பட்டி ஊராட்சிக்கான முகாம் முதலியார்பட்டி சேனைத்தலைவர் திருமண மண்டபத்திலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சேர்ந்தமரம் மஜராவிற்கான முகாம் திருமலாபுரம் ஸ்ரீராம் திரு திருமண மண்டபத்திலும், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் செவல்குளம் ஊராட்சிக்கான முகாம் செவல்குளம் அங்காள பரமேஸ்வரி கல்யாண மண்டபத்திலும் நடைபெற்று வருகிறது.
மேலும், 25.07.2025 அன்று புளியங்குடி வட்டம் வார்டு எண் 9,10.11 ஆகியவற்றிற்கான முகாம் இல்லத்து இல்லத்து பிள்ளைமார் பிள்ளைம திருமண மண்டபத்திலும், ஆலங்குளம் வட்டம் வார்டு எண் 8,15 ஆகியவற்றிற்கான முகாம் அண்ணா நகர் மெயின்ரோடு ஆலங்குளம் வார்டு எண் 12 சமுதாய நலக்கூடத்திலும், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தெற்குமேடு ஊராட்சிக்கான முகாம் தெற்கு மேடு தேவர் சமுதாய திருமண மண்டபத்திலும், தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி, மத்தளம்பாறை ஊராட்சிகளுக்கான முகாம் ஆயிரப்பேரிச சேவை மையத்திலும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் கீழ வீரசிகாமணி, நொச்சிகுளம் ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் கீழவீரசிகாமணி காளியம்மன் கோயில் வளாகத்திலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குலையநேரி ஊராட்சிக்கான முகாம் சுப்பையாபுரம் சமுதாயநலக்கூடத்திலும், சுரண்டை வட்டம் வார்டு எண் 6.7 ஆகியவற்றிற்கான முகாம் சிவகுருநாதபுரம் முப்பிடாதியம்மன் கோவில் கலையரங்கத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே. பொது மக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், உடனிருந்தனர்.
One attachment • Scanned by Gmail
| ReplyReply allForwardAdd reaction |