கடையநல்லூரில் பைக் விபத்தில் முதியவர் பலி
1 min read
Elderly man dies in bike accident in Kadayanallur
24.7.2025
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மின்வாரியம் அருகே மஹ்மூதா நகரில் குடியிருக்கும் திவான் மைதீன் மகன் லியாகத் அலி (68)என்ற முதியவர் பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டு மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை வந்த பொழுது எதிரே வந்த பைக் இவரின் பைக்கின் மீது நேருக்கு நேராக மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட லியாகத்அலி மற்றும் எதிரே பைக்கை ஓட்டி வந்த கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் அஜய் 18 இருவரும் படுகாயம் அடைந்தனர் உடனே அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு லியாக்கத் அலியை தென்காசி தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலன்இன்றி லியாக்கத் அலி உயிரிழந்தார் அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக லியாக்கத் அலியின் உடல் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது காயமடைந்த அஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இறந்த லியாக்கத் அலிக்கு மனைவி மற்றும் ஒரு பெண், 4ஆண் பிள்ளைகள் உள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.