June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கங்கை தீர்த்தம் கொண்டு வந்த மோடி; சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு

1 min read

Modi brings Ganga water; performs abishekam and worships Choleswarar

28.7.2025
புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில், பிரதமர் மோடி கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். அவருக்கு சிறப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு கங்கைகொண்ட சோழீசுவரருக்கு பிரதமர் மோடி மகா அபிஷேகம் செய்தார்.

முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து இருந்தார்.மாமன்னர் ராஜேந்திர சோழன் 1000 ஆவது ஆண்டு விழா கோலாகலமாக தொடங்கியது.
சோழகங்கம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வரை பிரதமர் மோடி ரோடு ஷோவில் வழியெங்கும் திரண்டிருந்த கணக்கான மக்களை பார்த்து கையசைத்தபடி காரில் சென்றார்.

முன்னதாக திருச்சியில் உள்ள ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி ஞாயிற்று காலை கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அவர் செல்லும் வழியில் திரண்டிருந்த பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி சென்றார். சோழகங்கம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வரை பிரதமர் மோடி ரோடு ஷோவில் வழியெங்கும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து கையசைத்தபடி காரில் சென்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *