June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுக்கும் முதியவர்

1 min read

An old man begging ‘digitally’

29.7.2025
திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுத்து வருகிறார்.

யாராவது சில்லறை இல்லை என்றால் அக்கவுண்டில் போடு என ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை காட்டுகிறார். வித்தியாசமான அவரது இந்த அணுகுமுறையால் பலரும் டிஜிட்டல் முறையில் பிச்சை போட்டு வருகின்றனர்.இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர், தற்போது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது பர்சில் பணம் வைத்துக்கொள்வது அரிதாக உள்ளதாக தெரிவித்த அவர் தான் 3 வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வைத்து இருப்பதாகவும், ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுப்பதாகவும், இதனால் ‘டிஜிட்டல்’ முறையிலேயே பலர் பணம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். இளைஞர்கள் சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது வைரலாகி வருகிறது.

அதுசரி உழைத்து சாப்பிடலாம் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *