June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரஷியாவை தொடர்ந்து ஜப்பானையும் தாக்கியது சுனாமி

1 min read

Powerful earthquake – Tsunami hits Japan after Russia

30.7.2025
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான், ஹவாய், அலாஸ்கா மற்றும் ரஷியாவின் கிழக்கு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பான் பசிபிக் கடற்கரையோரம் உள்ள நகரங்களில் 9 லட்சம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹோக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அச்சுறுத்தலால் ஜப்பானின் வடகிழக்கில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது.
ரஷியாவின் செவெரோ-குரில்ஸ்க் மற்றும் வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி அலை தாக்கியது. அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து அவசர வழிமுறைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினர்.
வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷியாவின் கடற்கரையோரப் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் கடற்கரைக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் இருந்து கார்களில் சாரை சாரையாக மக்கள் வெளியேறுவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *