June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியப் பொருட்கள் மீதான டிரம்பின் வரி விதிப்பால் பாதிக்கப்படும் துறைகள்

1 min read

Which sector will be most affected by Trump’s tariffs on Indian goods?

31.7.2025
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
டிரம்பின் புதிய வரி விதிப்பால் எந்தத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பால் வேளாண்மை, ஜவுளி, மின்னணு, ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. வரிவிதிப்பால் நாட்டில் செல்போன் உற்பத்தித் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் வருமாறு:-

  1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
  2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்
  3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்
  4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ
  5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்
  6. காஞ்சன் பாலிமர்ஸ்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *