தமிழகத்தில் 23-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் – தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தகவல்
1 min read
All-party meeting to be held in Tamil Nadu on the 23rd – Election Commissioner Archana Patnaik informs
21.10.2026
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமையன்று (அக்.23) தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.