புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு
1 min read
Central government decides to withdraw new income tax bill
8.8.2025
கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட அன்று தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்த நிலையில், அந்த பரிந்துரைகளைக் கொண்டு புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை ஆகஸ்ட் 11ல் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியது. வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவே இந்த முறையைக் கொண்டு வருவதாக மத்திய அரசு அப்போது கூறியிருந்தது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 முறை கியாஸ் சிலிண்டரை ரூ. 300 கொடுத்து நிரபிக்கொள்ளலாம். அந்த தொகை மீண்டும் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கே மானியமாக ஒவ்வொரு முறையும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்திற்கு ரூ. 12 ஆயிரம் கோடி மானியம் விடுவிக்க மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான உஜ்வாலா திட்டத்திற்கு ரூ. 12 ஆயிரம் கோடி மானியம் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தொகை மூலம் உஜ்வாலா திட்டத்தில் உள்ள 10.33 கோடி பேர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மரக்காணம் – புதுவை இடையே 4 வழிச்சாலை அமைக்க கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 2,157 கோடியில் இந்த சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, புதிய வருமான வரி சட்ட திருத்த மசோதாவை மாற்றங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்றுவிட்டு, திருத்தப்பட்ட புதிய மசோதாவை தகுந்த நேரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.