June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மரணம்

1 min read

Nagaland Governor L. Ganesan passes away

15.8.2025
நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்தவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில், இன்று மாலை 6.23க்கு இல.கணேசன் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80.
இல.கணேசன் பொது வாழ்க்கை வருமாறு:-
தஞ்சை மாவட்டத்தில் 16 பிப்ரவரி 1945-ம் ஆண்டு லக்குமி ராகவன் – அலமேலு தம்பதிக்கு பிறந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு, திருமணம் செய்யாமல் பொதுவாழ்வுக்கு வந்தவர் இல.கணேசன். பாஜக செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தவர் இல.கணேசன். 1991-ல் அமைப்பு செயலாளர் ஆனார்.
2009, 2014 மக்களவை தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார். 2016-ல் மத்திய பிரேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல.கணேசன்.பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்பு வகித்தவர். 2021 ஆக 27-ல் மணிபூர் கவர்னராக இல.கணேசன் பொறுப்பேற்று 19 பிப்.2023 வரை பணியாற்றினார்.
இடையே 2022-ம் ஜூலை 18- நவம்பர் 17 வரை மேற்கு வங்க மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்தார். 2023 பிப்ரவரி 20 முதல் நாகாலாந்து மாநில கவர்னராக இல.கணேசன் பொறுப்பு வகித்து வந்தார். கண்ணியமான பேசுக்கும் கணீர் தமிழக்கும் அறியப்பட்டவர்.தமிழ்நாட்டில் பாஜகவை கடைக்கோடிக்கும் சென்று சேர்ந்தவர் இல.கணேசன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *