August 23, 2026

Seithi Saral

Tamil News Channel

கிராம முன்னேற்றத்திற்கு தனித்துறை அமைக்க ஆ.செண்பகராமன் வலியுறுத்தல்

1 min read

A. Senbagaraman urges to set up a separate department for rural development

15.8.2025
தோரணமலையில் கோவிலில் 15.8.2025 அன்று கடைசிவெள்ளி வருணகலச பூஜையுடன் சுதந்திர தினமும் கொண்டாடப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் பேசியதாவது:-
ஒவ்வோரு இந்தியனுக்கும் தெய்வீகத் தோடு தேசப்பற்று இருக்க வேண்டும்.‌ குறிப்பாக இந்துக்கள் தேசப்பற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மன்னர்கள் காலத்தில் கோவில்களை பிரமாண்டமாக கட்டினான். அக்கோவில் வழிபாட்டுக்கு மட்டும் பயன்படவில்லை. நாட்டின் கருவூல அறையும். அரசு அலுவலகமும் . போர் பயிற்சி தலமும் அங்கே இருந்தன. அதனால்தான் அரண்மனை மை விட கோவிலை பிரமாண்டமாக கட்டினான். தற்போதும் பல கோவில்கள் தேசப்பற்றை பறைசாற்றி கொண்டிருக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் மகாத்மா காந்தி சிற்பம் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் தோரண மலையில் தெய்வ பணியையும் தேசப் பணியையும் செய்து வருகிறோம் . ஆண்டுதோறும் பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு அன்று ராணுவ வீரர்களை கவுரவிக்கிறோம்..
தோரணை மலையில் நூலகம் உள்ளது. இங்கு அறிவுசார் புத்தகங்கள் போட்டித் தேர்வு புத்தகங்கள் உள்ளன. அதோடு தேசத் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் பல உள்ளன.
முத்துமாலைபுரத்தில் உள்ள எனது பூர்வீக வீட்டில் எனது பெற்றோர் பெயரில் அதாவது ஆதி நாராயணன் சந்திரலீலா மாலை நேர இலவச படிப்பகம் இயங்கி வருகிறது. அங்கு நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கும் நூலகம் உள்ளது.
இன்று கடைசி வெள்ளி அன்று சுதந்திர தினம் வருவது சாலச்சிறந்தது. இன்று இங்கு வந்துள்ள பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
மகாத்மா காந்தி கிராம முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்றார். நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கிராமங்கள் முழு வளர்ச்சி அடையவில்லை. நான் பிறந்த கிராமமான முத்துமாலைபுரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தை கொண்டுள்ளேன். அங்குள்ள குழந்தைகளை நன்கு படிக்க வைக்க ஆசைபடுகிறேன்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் தான் பெருங்குறையாக உள்ளது‌. மேல்படிப்புக்கு செல்லும்போது ஆங்கிலம் சரியாக தெரியாமல் அவஸ்தை படுகிறார்கள். இதனால் சிலர்‌படிப்பை நிறுத்திய சம்பவமும் உண்டு.
எனவே கிராமப்புற மாணவர்கள் ஆங்கில அறிவை பெற வேண்டும்.இதற்காக தொழில் அதிபர்கள் வசதி படைத்தவர்கள் கிராமத்தை தத்தெடுத்து குழந்தைகளுக்கு ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும்.‌
நாங்கள் இந்த சமூகப்பணியை பக்தர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறோம். இன்னும் அன்பர்கள் உதவினால் எங்களது அறப்பணியும் கல்வி பணியும் சிறக்கும்.
மேலும் கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலம் உள்பட பல்வேறு பாடங்களில் முன்னேற்றம் அடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற மேம்பாட்டுக்கான தனி துறையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு செண்பகராமன் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *