August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

1 min read

Speaker Om Birla warns opposition MPs

18.8.2025
பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

சுதந்திர தின விடுமுறையை அடுத்து இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியது.

இதனால் மக்களவை மத்திய 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை எச்சரித்த சபாய்நகர் ஓம் பிர்லா, “நீங்கள் கோஷமிடும் அதே சக்தியுடன் கேள்விகளைக் கேட்டால், நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும். மக்கள் உங்களை அரசாங்க சொத்துக்களை அழிக்க இங்கு அனுப்பவில்லை, மேலும் அரசாங்க சொத்துக்களை அழிக்க எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.

நீங்கள் அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சித்தால், நான் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நாட்டு மக்கள் உங்களைப் பார்த்து வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் உங்களை மீண்டும் எச்சரிக்கிறேன். அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சிக்காதீர்கள். இது உங்களுக்கு எனது வேண்டுகோள்” என்று தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *