புளியங்குடி: கடையில் பணம் திருடியவர் கைது
1 min read
Puliyangudi: Man arrested for stealing money from shop
19.8.2025
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் நுழைந்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடியில் அமைந்துள்ள ஓர் கடையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஷாம்சுந்தர் மற்றும் சார்பு ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி கடையில் இருந்து பணத்தை திருடிய ராஜபாளையம், அயன் கொல்லன்கொண்டான் கிராமமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் பொன்ராஜ் (வயது 42) என்ற நபரை ராஜபாளையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவர் திருடி சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.
இந்த புகாரில் சிறப்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த புளியங்குடி காவல்துறை யினரை காவல்துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.