June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத்தில் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளி- ஒத்திவைப்பு

1 min read

Opposition parties create chaos in Parliament on last day – adjournment

21.8.2025

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.
பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய ஒரு நிமிடத்திலேயே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல மேல்சபையிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *