தென்காசி:கடைகளில் 195 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
1 min read
Tenkasi: 195 kg of plastic bags seized from shops
22.8.2025
தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடை களில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா பரப்பு ரையாளர்கள் அடங்கிய குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது பல்வேறு கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டீ கப்புகள் என 195.400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை – பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசு நாள்தோறும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்படுத்துவதை தடை செய்வது பற்றி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவரும் நிலையில் சில கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். இது ஒரு சட்ட விரோத செயலாகும். எனவே இது போன்ற அதிரடி சோதனைகளை அடிக்கடி நடத்தி தென்காசி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.