June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

1 min read

M.K. Stalin extended birthday wishes to Rahul.

19.6.2026
காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும் வாழ்த்துகளை பகிர்ந்து உள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது;

எதிர்க்கட்சித் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடனே திமுக கூட்டணியில் இருந்து சொல்லிக் கொள்ளாமல் தவெக ஆட்சி அமைய காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. பின்னர் கூட்டணியில் இடமபெற்று அமைச்சர்களையும் பெற்றது.

இந் நிலையில் ராகுலுக்கு அனைவரும் வாழ்த்துகளை கூறிய தருணத்தில் ஸ்டாலின் வாழ்த்து கூறுவாரா என்ற சஸ்பென்ஸ் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஆனால் ஸ்டாலின் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி உள்ளார். அந்த வாழ்த்தானது வழக்கத்திற்கு மாறாக இருந்தது தான் விஷயம்.

2025ல் ஆண்டில் எக்ஸ் பதிவில் ஸ்டாலின் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து இருந்தார். அதில் கொள்கை ரீதியான என் சகோதரர் ராகுல் என்ற வார்த்தையை பதிவிட்டு இருந்தார்.
2024ம் ஆண்டு கூறிய வாழ்த்தில், அன்பு சகோதரர் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று குறிப்பிட்டு இருந்தார். சில நாட்களுக்கு முன்னதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ராகுலை விமர்சித்து கட்டுரையும் எழுதப்பட்டு இருந்தது அதன் நீட்சியாக, பிரதர் என்ற சொல்லாடலை தவிர்த்து, எளிமையாக ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறி உள்ளார்.

இதனிடையே இன்று (ஜூன் 19) பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு, ராகுல் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது;

அரசியலமைப்பு சட்டத்தின் மீது அர்ப்பணிப்பிலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம். தமிழக மக்களின் நலன்களுக்கு நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *