June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக முதல்வர் வருகையால் பீகார் முன்னேறி விடுமா?- பிரசாந்த் கிஷோர் கேள்வி

1 min read

Will Bihar progress with the visit of the Tamil Nadu Chief Minister? – Prashant Kishor questions

25/8/2025
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (27-ம் தேதி) முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?
பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?

காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *