தெற்கு அச்சம்பட்டி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது.
1 min read
Good Teacher Award for South Achmapatty teacher
6.9.2025
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், தெற்கு அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியை
செ.ஸ்டெல்லா புஷ்பரஞ்சினி – க்கு நல்லாசிரியர் விருதினை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதினை தெற்கு அச்சம்பட்டி கிராமத்திலிருந்து கடந்த 21ஆண்டுகளாக சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மணலூர் கிராமம், பாளையங்கோட்டை புறநகர் ஒன்றியம் சீவலப்பேரி, தருவை ஆகிய பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவரும் 2018 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பாளையங்கோட்டை புறநகர் ஒன்றியம், மருகால்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வீரபெருஞ்செல்வி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியை
செ.ஸ்டெல்லா புஷ்ப ரஞ்சனிக்கு நல்லாசிரியர் விருதினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி சென்னை மாநகர மேயர் இரா.ப்ரியா, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை செ.ஸ்டெல்லா புஷ்ப ரஞ்சனிக்கு தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.