ஆலங்குளம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வாலிபர் கைது
1 min read
Youth arrested for printing fake currency notes near Alankulam
6.9.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரி பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுக்களை வீட்டில் அச்சடித்து புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள்ள நோட்டை அச்ச டித்து புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து கட்டு, கட்டாக ரூபாய்.500, மற்றும் ரூபாய் .200 கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட் டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரி கிராமம் பாபநாசம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மேகலிங்கம் என்பவரது மகன் மணிகண்டபிரபு (வயது 25). இவர் வீட்டில் கலர் பிரிண்டர் மூலம் ரூ.500, 200 என கள்ள நோட்டுகளை அச்சடித்து வெளியில் விநியோகம் செய்து வருவதாக ஆலங்குளம் போலீசாருக்குரக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் (பொ) சுரேஷ்குமார், எஸ்ஐ சத்யவேந்தன். ஏட்டுக்கள் குமரேசன்.பாலகன், முகமது முஸ்தபா மற்றும் போலீசார் மணிகண்ட பிரபுவின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் ஜவுளி கடை துணி பையில் கட்டு, கட்டாக 500, மற் றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். அங்கு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கலர் பிரின்டர் மிஷினும் இருந்தது.
இதை தொடர்ந்து மணிகண்டன் பிரபு மீது இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த தினார். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுக் களையும், அதை அச்சடிக்க பயன்படுத் திய கலர் பிரிண்டர் மிஷினையும் பறிமுதல் செய்தனர்.மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.