June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் 3 பேருக்கு கலெக்டரின் போலி கையெழுத்துடன் பணிநியமன ஆணை- 2 பேர் கைது

1 min read

Kadayam: Appointment orders issued to 3 people with forged signatures of the Collector – 2 arrested

15.9.2025
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கலெக்டரின் கையெழுத்துடன் போலி நியமன ஆணை கொடுத்து 3 வாலிபர்களிடம் ரூபாய் 9 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜேந்திர குமார். என்பவர் தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் அலுவலகம் ஒன்று நடத்தி வந்தார்.
கீழக்கடையம் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சைலப்பன் என்பவரது மகன் ராஜா (வயது 30). இவருக்கும். நாகராஜேந்திரகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது தனக்கு பல அரசு அதிகாரிகளை நன்கு தெரியும், என்றும் யாருக்கேனும் அரசு வேலை வேண்டுமென்றால் தன்னிடம் அழைத்து வருமாறு ராஜாவிடம் நாகராஜேந்திர குமார் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜா, தனக்கு தெரிந்த மேலும் 2 வாலிபர்களுடன் நாக ராஜேந்திர குமாரை சந்தித்து தங்களுக்கு அரசு வேலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.
வேலை வேண்டுமென்றால் நீங்கள் தலா ரூ.3 லட்சம் தர வேண்டும் என நாகராஜேந் திரகுமார் கேட்டுள்ளார். இதனை நம்பிய 3 பேரும் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூபாய் 9 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தனர். ஆனால் பல நாட்கள் கடந்த பிறகும் அவர் அரசு வேலை வாங்கி தர வில்லை.
இதுகுறித்து 3 பேரும் நாக ராஜேந்திர குமாரிடம் அடிக்கடி வேலை பற்றி கேட்டுள்ளனர். இதையடுத்து அவர் போலியான ஆவணத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக விருதுநகர் அருகே உள்ள கந்தப்புரம் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் ரமேஷ் என்பவரின் உதவியை நாடியுள்ளார். அவரும் இந்த மோசடிக்கு உடந்தையாக தனது
ஸ்டூடியோவில் வைத்து தென்காசி கலெக்டரின் கையொப்பத்தை முறைகேடாக போட்டு போலியான அரசுப் பணி நியமன ஆணையை தயாரித்து அதனை ராஜா உள்பட 3 பேருக்கும் கொடுத் துள்ளனர். ஆர்வத்துடன் ஆணையை பெற்றுக் கொண்ட 3 பேரும் தங்கள் வேலை தொரடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அணுகினர்.
அப்போதுதான், அதில் உள்ள கையெழுத்து கலெக்ட ருடையது இல்லை எனவும், அது போலியான ஆணை எனவும் அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் 3 பேரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் செல்வகுமார் கடையம் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து விருதுநகரில் பதுங்கியிருந்த நாக ராஜேந்திரகுமார், ரமேஷ் ஆகிய இருவரையும் கடையம் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர்.மேலும் ஸ்டூடியோவில் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்
இந்த சம்பவம அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *