June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோவெளியிட்டவர் கைது

1 min read

Tenkasi: Youth arrested for posting video with weapons on Instagram

15.9.2025
தென் மாவட்டங்களில் அதிக அளவு ஜாதி கலவரத்திற்கு காரணமாக அமையும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் தொடர்பாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். இதில் ஆயு தங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ யாராவது வெளியிட்டு உள்ளனரா என கண்காணித்து வந்தனர் .

இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே உள்ள கரிசல் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி பூதத்தான் என்பவரது மகன் பாலமுருகன் (வயது 20) என்பவர் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. இது குறித்து அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பாலமுருகன் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அச்சன்புதூர் பகுதியில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

எனவே சமூக வலைத்தளங் களை பயன்படுத்துவோர் சமூகஅக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். யாராவது தேவையற்ற வகையில் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக,சுயவிளம்பரத் திற்காகவோ அல்லது போட்டிக்காகவோ கைகளில் ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் எஸ். அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *