June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

1 min read
Seithi Saral featured Image

Earthquakes hit Manipur, Arunachal Pradesh in succession

20.9.2025
அருணாச்சல பிரதேசம் மேற்கு கமெங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிவு மையம் தெரிவித்துள்ளது

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.58 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து மணிப்பூரில் ரிக்டர் 2.7 அளவில் காலை 5.32 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *