August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் 22 வது பிறந்தநாள் விழா

1 min read

Pothikai Express 22nd birthday celebration at Sengottai

21.9.2025
செங்கோட்டை ரயில் நிலைய முதல் நடைமேடையில் வைத்து பொதிகை அதிவேக ரயிலின்
22 வது ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு செங்கோட்டை இரயில் பயணிகள் சங்க தலைவா் செங்கோட்டை எல்.எம்.முரளி தலைமை தாங்கினார். செயலாளா் கே.எச்.கிருஷ்ணன் பொருளாளா் சுந்தரம், மதுரை ரயில்வெ கோட்ட டிஆர்யுசிசி.உறுப்பினா் ராஜேந்திரராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

மக்கள் தொடர்பு அலுவலா் ராமன் அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடா்ந்து இரயிலின் பெண் பைலட் வனிதா மற்றும் உதவி பைலட் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப் பட்டது. பின்னா் ரயில் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பூலாங்குடியிருப்பு எஸ்எஸ் கார்டன் சார்பில் முன்னாள் வேளாண் அலுவலா் ஷேக்முகைதீன் மூலிகை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இரயில் பயணிகள் நலச்சங்க உறுப்பினா் செந்தில் ஆறுமுகம், ஆர்.என்.குமார், மற்றும் நிர்வாகிகள் பயணிகள், பொதுமக்கள் சமூக ஆர்வலா்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *