பண்பொழி திருமலைக் கோவிலில் ரூ.2 கோடி செலவில் கிரிவலப் பாதை பணிகள்
1 min read
Girivala path works at Panpozhi Tirumala Temple at a cost of Rs. 2 crore
21.9.2025
தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் கிரிவல பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
உபயதாரர்கள் மற்றும் கோவில் நிதியிலிருந்து சுமார் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கிரிவல பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைய உள்ள நிலையில், அதற்கானமுன்னோட்ட பணிகள் துவங்கப்பட்டது
திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் கோமதி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் முன்னிலையில் நடைபெற்ற பூஜை விழாவில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பண்பொழி இசக்கி வடகரை பாப்பா, அழகை கணேசன், குற்றால நாதர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன்
திருக்கோவில் கணக்கர் லெட்சுமணன் அர்ச்சகர் ரமேஷ் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.