June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

முத்துமாலைபுரத்தில் சிவந்தி ஆதித்தனாரை போற்றி மாணவ-மாணவிகள் உறுதிமொழி

1 min read

Students take a pledge in honor of Shivandi Adithanar in Muthumalaipuram

24.9.2025
சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் தனது பெற்றோர் வசித்த வீட்டை இலவச மாலைநேர படிப்பகம் நடத்தி வருகிறார். அந்த ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலை நேர இலவச படிப்பகத்தில் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். உறுதிமொழி வருமாறு:-
குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்துவோம்.
பாமர மக்களையும் படிக்க வைத்த தினத்தந்தியை போற்றுவோம். கல்விக்காவும் ஆலயத்திற்காகவும் அதிக சேவை செய்த சிவந்தி ஆதித்தனாரை வணங்குவோம்.
தென்காசி கோபுரத்தை மீண்டும் உருவாக்கிய இரண்டாம் பராக்கிரம பாண்டியனை போற்றி புகழ்வோம்.
கிராம மக்கள் கல்வியில் மேம்பட சபதம் ஏற்போம்.
கிராம குழந்தைகளின் ஆங்கில அறிவை வளர்ப்போம்.
இவ்வாறு உறுதி மொழி எடுத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *