சித்த மருத்துவ ‘புகை மூலிகை’ சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடு- மத்திய அரசு உத்தரவு
1 min read
New restrictions on Siddha medicine ‘herbal smoke’ therapy – Central Government order
16.6.2026
சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறைகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி புகை சிகிச்சை மற்றும் பொடி திமிர்தல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதாவது புகை சிகிச்சை என்பது குறிப்பிட்ட மூலிகைகள் அல்லது மருத்துவப் பொருட்களை எரித்து, அதிலிருந்து வெளிவரும் புகையை நோயாளி சுவாசிக்கச் செய்தல் அல்லது உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் அந்தப் புகையைச் செலுத்துவதன் மூலம் உடலைச் குணப்படுத்தும் முறையாகும். அதேபோல ‘பொடி திமிர்தல்’ என்பது மஞ்சள், கொள்ளு போன்ற மருத்துவக் குணம் கொண்ட மூலிகைப் பொடிகளை உடலின் மீது குறிப்பிட்ட அழுத்தத்துடன் தேய்த்து மசாஜ் செய்யும் முறையாகும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், வாதத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இனி இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளிகளை முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து நோயாளியின் உடல்நிலை மதிப்பீடு, சிகிச்சை தொடர்பான ஆவணப் பதிவு, கண்காணிப்பு ஆகி யவை கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் இந்த சிகிச்சைக்கான எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவதும், சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பதிவு செய்வதும் கட்டாயம் ஆகும்.
மத்திய அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பும். ஆதரவும் கிளம்பி இருக்கிறது.